Monday, September 8, 2025

Navagunjara

साख्यत्व (परमात्मा से मित्रता)-Friendship with divine


During Covid lockdown i got opportunity to attend classes to know
more about Sanatana Dharma. 


I attended classes in Adhyapika training program during 2021. When we were about to
complete our course everyone got opportunity to give presentation on their favourite topics
in group or individual..


Mostly group work is preferred but intially i got no team so i selected about Navagunjara
and did lot of research through internet and collected points and prepared my presentation
but due to time constraint i was asked to join in group presentation. So Likeminded friends
joined for Aarupadai Veedu Presentation and i prepared my talk for First padai veedu.
But on final presentaion day i could not perform due to asoucham. All my friends were
supportive and they carried on presentation taking my part too.


I was very much disappointed, but to my surprise my guru Geetha Mami gave me an
opportunity to perform about my earlier sent solo presentation topic Navagunjara........
still couldn't believe and cannot forget about that day miracle.


This happened on may 2021,  but am sharing about it on my blog 2025. Because, this  year
 i got to see Golu doll Navagunjara with arjuna and we have placed order for same to 
add in our Golu. So i immediately felt like sharing it on my blog too. My presentation
 was in tamil so i have shared how i presented as below for those who cant understand
 tamil please see image of my ppt presentation in English. 


Arjuna Krishna Adbhuta Shakyam

மனுஷாளோட பிரக்ஞையில்  கனவில் கூட எண்ணிப்
பார்க்க முடியாத விஷயங்கள், தெய்வப்   பிரக்ஞையில் உண்மையாக 
இருக்கக் கூடும்.

அப்படி 9 உயிர்வகையின அம்சங்களை உள்ளடக்கிய, அந்த உருவத்தின்
பெயர் தான் நவகுஞ்சரம்.


நவ - 9 , குண் - குணம் , ஜரா -old


நவவித பக்தியில்  எட்டாவது நிலை ஸக்யம் .(ஸக்யம் - நட்பு)
"நிருத்யம் மதுரம் , ஸக்யம் மதுரம், மதுராதிபதே ரகிலம் மதுரம்"
மதுராஷ்டகதில்,
வல்லபாச்சாரியார் கிருஷ்ணனை பார்த்து, உன் நடனம் அழகு,
உன்னோட நட்பு ஒரு அழகு,
மதுரா  நாயகனே நீ எல்லாவற்றிலும் இருப்பதால் இந்த அகிலமே அழகு.


நாம் தேர்ந்து எடுக்கும் பொருட்கள் நம் குணத்தை காட்டும், ஆனால் நாம் தேர்ந்து

எடுக்கும் நட்பு நம்மையே காட்டும்.அப்படி பகவான் கிருஷ்ணனை தன் நண்பனாக

கொண்டு ஸக்ய பக்திக்கு உதாரணமாக திகழ்ந்த அர்ஜுனனின் கதை இது.


இந்த கதை சரளா தாசர் எழுதிய மகாபாரதம் கதை பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கு.

பூரி ஜெகநாதர் ஆலய கோபுரத்தில் நீல சக்ரா இருக்கு. அதுல 8 நவ குஞ்சரங்கள்

மேல் நோக்கி கொடியை பார்த்தபடி  அமைக்க பட்டிருக்கும்.  


ஒரு நாள் காட்டில் அர்ஜுனன் நடந்து  போகின்ற பொழுது, அவர்  முன்னே விசித்திர  -
உருவம்  என்று சொல்லமுடியாமல் அது கொஞ்சம் இது கொஞ்சம் சேர்ந்த ஒரு உருவம்
வந்தது.இயற்கையோட சிருஷ்டியில் இப்படி ஒரு உருவம் இருக்குமா என்ன? அவர் 
இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. ஆனால் அப்படி பார்க்காததால் அப்படி ஒன்று
இல்லை என்று ஆகிவிடாது.அவனோட மனதில் ஏற்பட்ட பயத்தால் உடனே அந்த
உருவத்தை தாக்குவதற்காக தன்னோட வில்லை எடுக்கும் போது அந்த உருவம்
தன் கரங்களில் சக்கரம் ஏந்தி இருப்பதை  கவனித்தார்.உடனே அவர்  தன்
மனக்கண்களில் பகவான் கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்க்கிறான்.


“மனித மனம் ஒரு  எல்லைக்குள் அடங்குவது ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது”


அப்படிங்கறது நினைச்சு பார்த்த உடனே தன் வில்லை கீழே வைத்துவிட்டு, தன்

முன்னால் நிற்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை உணர்ந்து நமஸ்கரிக்கின்றார்.


Nava-9,Gunja-Bouquet of flowers-here it looks like bouquet of nine creatures.


பல ரூபங்களின் வழியாக பகவான் தன்னோட மகிமையை , அர்ஜுனன் மூலமாக

நமக்கு உணர்த்த விரும்புவது என்னனு பார்ப்போம் .


இந்த உருவம்  பார்ப்பதற்கு,சேவல் தலையும், யானை, புலி, மான் ஆகியவற்றின்

கால்களுடன் நின்ற நிலையில், நான்காவது காலுக்கு பதில் தாமரை அல்லது ஒரு

சக்கரம் ஏந்திய ஒரு மனித கை, கழுத்து மயில் கழுத்தாகவும்,

காளையின் திமிலொடு, சிங்கத்தின் இடுப்பு கொண்டு, வால்

நாகப் பாம்பாகவும் இருந்தது. 

பகவத் கீதையில் krishanar ,

 படைத்தலைவரில் நான் ஸ்கந்தன் - அவர் சேவல் கொடியுடையவன் -மயில்
வாஹனன்", விலங்குகளில் நான் சிங்கம் பாம்புகளில் வாசுகி, வீரத்தில்
சிறந்து விளங்கும் ஆண் மகனை காளையொடு ஒப்பிடுவர். கிருஷ்ணன்
அர்ஜுனனை purusarsabha அப்பிடின்னு கூப்பிடுறார், யானைகளில்-  
ஐராவதம்,மனிதர்களில் நான் அரசன்.

புலியும்,மானும் எதிரெதிர் குணாதிசயத்தை உடையது . 


ஒரு மான் ஆனது மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடும், ஒரு புலியை

கண்டால் ஓடாமல இருக்குமா?  ஒரு சமயம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணர்

கண்ட காட்சியானது அவரை வியப்பில் ஆழ்த்தியது , மானும் புலியும்

நட்புடன் அமைதியாக நடந்து செல்வதை பார்த்தார்,  ஆனா மனிதர்கள்

மட்டும் தான் ஒருவருக்கொருவர் வெறுப்பும் பகையுணர்வு காட்டுகிறார்கள்.

“pāṇḍavānāṁ dhanañjayaḥ”-amongst the Pandavas I am Arjun

இதுலேர்ந்து நமக்கு என்ன தெரியறது 

அனைத்து ஜீவராசிகளிலும் பகவானை உணர்ந்து , கருணையுடனும் நட்புடனும்

இருந்தால் பகவானின் நட்பு நமக்கும் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை.


அது சக்ய பக்தி.


கடைசியாக ,கந்தனின் திருப்புகழை பாட இருந்த என்னை, ஸக்ய பக்தி பத்தி பேச
செய்தவரும் அவரே,கந்தனைப் பற்றி பேசினாலும்,கிருஷ்ணனை பற்றி பேசினாலும்
பகவானை பற்றி பேசுவது மட்டும் அல்ல, அவரை நம் சிந்தனையில் நினைப்பதே
பெரும் பாக்கியம்,ஏனென்றால்  பகவான் சர்வ வ்யாபி ஆனவர் ,அவர் இன்றி ஒரு
அணுவும் அசையாது.சர்வவ்யாபி ஆன அவருடைய அருளைப் பெற  நாம் அனைவரும்
நம் குரு, ஆச்சார்யர்கள் காட்டிய வழியில் செல்வோமாக .


Thank you.






`



No comments:

Navagunjara

साख्यत्व (परमात्मा से मित्रता)-Friendship with divin e During Covid lockdown i got opportunity to attend classes to know more about Sanatan...